கூட்டுறவு சங்கத்தில் அங்கர் விநியோகம்: குவிந்த மக்கள்
நாட்டில் பால்மா தட்டுப்பாடு மிக நீண்ட காலமாக நிலவி வந்த நிலையில் மக்கள் பாலுக்காக மிகவும் கஷ்ட நிலையினை சந்தித்து வந்தனர்.
அந்த நிலையில் தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் மூலம் அங்கர், ரத்தி பால்மா இன்று விநியோகம் செய்யப்படுகின்றது.
இந்நிலையில் வாழைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் மூலம் அங்கர், ரத்தி பால்மா விநியோகம் பொதுமக்கள் பாவனைக்கு மாத்திரம் பால்மா விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக பொது முகாமையாளர் எஸ்.டிலக்சன் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் மக்கள் நலன் கருதி பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் மூலம் அங்கர், ரத்தி பால்மா 380 விநியோகம் செய்த நிலையில் மக்களின் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.
வாழைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு பால்மா கொள்வனவிற்கு வந்த
மக்களுக்கு இரண்டு பால்மா பெட்டிகள் வழங்கப்பட்டதாக பொது முகாமையாளர்
எஸ்.டிலக்சன் தெரிவித்துள்ளார்.





