கலைஞரின் பணியினை தொடருங்கள் - ஸ்டாலினுக்கு ஆனந்தசங்கரி வாழ்த்து

India People Election
By Independent Writer May 02, 2021 08:09 PM GMT
Report

கலைஞர் ஆற்றிய பணியினை ஸ்டாலினும் தொடர வேண்டும் என்று தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி அனுப்பியுள்ள வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபைத் தேர்தலில் தி.மு.க, தலைவர் மு.க.ஸ்டாலின் வெற்றிபெற்றுள்ளமை தொடர்பாக அவர் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியிலியே இவ்வாறு தெரிவித்துள்ளார்.குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தி.மு.க. ஆட்சியில் 10 ஆண்டுகளின் பின் மீண்டும் உதயசூரியன் உதித்தமை தமிழ் பேசும் நல்லுலகில் மக்கள் அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. நீங்கள் அடைந்த வெற்றி தமிழர்களுக்கு பெரும் திருப்தியைத் தந்ததோடு, தங்கள் தந்தை இன்று இல்லாதது வருத்தத்திற்குரியதாகும்.

இச் சந்தர்ப்பத்தில் நீங்கள் இளைஞனாக இருந்த காலத்தில் நடந்த ஒரு சம்பவம் சரித்திர முக்கியத்துவம் பெற்றமையால் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன்.

ஏறக்குறைய 42 ஆண்டுகளுக்கு மேல் தங்கள் தந்தையார் வகித்து வந்த இதே பதவியை நியாயமற்ற முறையில் அன்றைய அரசு கலைத்த போது சீறியெழுந்த இலங்கை தமிழர் தலைவர் ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்கள் தமிழ் நாட்டிற்கு வந்து நீதி கேட்டு வாதாடி வென்ற வழக்கு நடைபெற்ற போது அன்று இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நான் அன்றைய வெற்றியில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைந்தேன்.

ஆகவே இன்று நீங்கள் ஈட்டியுள்ள வெற்றி எனக்குப் பல மடங்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இனப்பிரச்சினை தீர்விற்கு தங்கள் தந்தையார் கலைஞர் ஐயா அவர்களின் உதவியைப் பெறும்படி அன்றைய அரசை வேண்டியிருந்தேன்.

எமது நாட்டுப்பிரச்சனை தீர உங்களின் பங்களிப்பு மிக முக்கியமானது மட்டுமல்ல அவசியமானது என்றும் ஞாபகமூட்டி, உங்கள் தந்தையார் ஆற்றிய பணியை எமது விடயத்திலும் நீங்கள் தொடர வேண்டும் என வேண்டி இலங்கை வாழ் தமிழ் மக்களின் சார்பில் எமது மகிழ்ச்சியையும் வாழ்த்தையும் தெரிவிக்கின்றேன்.

உங்கள் பணி நீண்ட காலம் தொடர வேண்டும் என ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றேன். எம் நாட்டிலும் விரைவில் சூரியன் உதிக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். என்றுள்ளது.

Gallery
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US