அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்தால் வளர்க்கப்பட்ட பாதாள உலகம்: பொது பாதுகாப்பு அமைச்சர் சுட்டிக்காட்டு
கடந்த இரண்டு, மூன்று தசாப்தங்களாக அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்தால் பாதாள உலகம் வளர்க்கப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் , பாதாள உலகத்திற்கு கடந்த காலங்களைப் போல அரசியல் பாதுகாப்பு கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் (21) உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் நடவடிக்கை
எந்தவொரு தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரோ அல்லது அமைச்சரோ பாதாள உலகத்துடன் தொடர்புகளைப் பேணுவதில்லை" என்று அவர் கூறியுள்ளார்.
இரண்டு அல்லது மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் செய்யப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இன்னும் கைது செய்யப்பட வேண்டியுள்ளனர். ஆனால், அண்மைய குற்றங்களின் சந்தேக நபர்கள் சில மணி நேரங்களுக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், பாதாள உலகத்தை எதிர்த்துப் போராட அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காக சில நடவடிக்கைகளை வெளியிட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஜெலென்ஸ்கியை நாட்டை விட்டே துரத்த ட்ரம்ப் திட்டம்: போர் வெற்றியை அறிவிக்கவிருக்கும் ரஷ்யா News Lankasri

உக்ரைன் ஜனாதிபதி மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மோசமாக விமர்சித்துள்ள எலான் மஸ்க் News Lankasri

மாஸ் வரவேற்பு பெற்றுள்ள டிராகன் படத்திற்காக பிரதீப் வாங்கிய சம்பளம்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
