சட்ட வைத்திய அதிகாரியின் முன் முன்னிலைப்படுத்தப்பட்ட ஆனந்த பாலித்த
புதிய இணைப்பு
மத்திய குற்றப் புலனாய்வு பணியகத்தினால் கைது செய்யப்பட்ட தொழிற்சங்க செயற்பாட்டாளரான ஆனந்த பாலித்த சட்ட வைத்திய அதிகாரியின் முன் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
2015 முதல் 2019 வரை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தில் நடைபெற்ற மோசடி தொடர்பான நேற்று (16) அவர் கைது செய்யப்பட்டிருந்தார்..
முதலாம் இணைப்பு
மத்திய குற்றப் புலனாய்வு பணியகத்தினால் கைது செய்யப்பட்ட தொழிற்சங்க செயற்பாட்டாளரான ஆனந்த பாலித்த கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
2015 முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் மேலதிக நேரக் கொடுப்பனவுகள் தொடர்பில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாக்குமூலம் பதிவு
இந்த காலகட்டத்தில் சந்தேகநபர் மேலதிக வேலை நேரத்திற்காக ரூ. 3,111,000 ஐ மோசடியாக பெற்றுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

கொழும்பு மத்திய குற்றப்புலனாய்வு பணியகத்தில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவர் அழைக்கப்பட்டதை தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
2015 முதல் 2019 வரை நடந்ததாக கூறப்படும் இந்த நிதி மோசடி குறித்து நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
வங்காள விரிகுடாவில் தீவிரமடையும் அக்வான் புயல் - உயர் எச்சரிக்கை நிலையில் விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை