செம்மணி அணையா விளக்கு போராட்டத்திற்கு மட்டக்களப்பிலும் தீப்பந்தங்களை ஏந்தி ஆதரவு
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் இடம்பெறும் அணையா விளக்கு போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் மட்டக்களப்பு - உகந்தாச்சிமட பாலத்திற்கு அருகாமையில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது இன்று(23) மாலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ். செம்மணி மனிதப் புதைகுழி
யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதி கோரியும் சர்வதேசக் கண்காணிப்புடன் மனிதப் புதைகுழிகளின் அகழ்வை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியும் பல்வேறு சுலோகங்களை ஏந்தி ஈடுபட்டனர்.
குறித்த போராட்டத்தில் தீப்பந்தங்களை ஏந்தியவாறு இலங்கை தமிழரசுக் கட்சி மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மதத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், பொது அமைப்பின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பல தரப்பினர் கலந்துகொண்டிருந்தனர்.












சரியான சாப்பாடு இல்லாமல் கிழிந்த உடையுடன்.., மாணவர்கள் முன்பு கிரிக்கெட் வீரர் நடராஜன் எமோஷனல் News Lankasri

நடிகை ரம்யா கிருஷ்ணன் மகனா இது, லேட்டஸ்ட் போட்டோ... எங்கே சென்றுள்ளார் பாருங்க, வைரல் போட்டோ Cineulagam

ஈஸ்வரி குறித்து கொற்றவையிடம் தர்ஷினி கூறிய உண்மை, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
