யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வெதுப்பகங்களுக்கு நீதிமன்ற வழங்கியுள்ள உத்தரவு
யாழ் .கொக்குவில் பகுதியில் கடந்தமாதம் சுகாதார வைத்திய அதிகாரிகளால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 02 வெதுப்பகங்களுக்கு தண்ட பணம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி, மேற்பார்வையின் கீழ் கடந்தமாதம் 12.06.2024 ஆம் திகதி குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
வழக்கு விசாரணை
இதன்பின்னர் வெதுப்பகங்களிற்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் வழக்குகள் கடந்த 24.06.2024 அன்று தாக்கல் செய்யப்பட்டன.

வழக்கினை விசாரித்த நீதவான் ஒரு வெதுப்பகத்தை மூடி சீல்வைக்குமாறும், மற்றைய வெதுப்பகங்கத்தை விரைந்து திருத்தி அமைக்குமாறும் உத்தரவு பிறப்பித்ததோடு வழக்கை இன்றைய தினத்திற்கு 03.07.2024 ஒத்திவைத்தார்
இந்நிலையில் இன்று வழக்குகள் மீள விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது நீதவான் செ. லெனின்குமார் இரு பேக்கரி உரிமையாளர்களிற்கும் தலா 80,000/= தண்டம் அறவிட்டதுடன், திருத்த வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகரால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டமையால் பேக்கரிகளை தொடர்ந்து இயங்க அனுமதி வழங்கியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 10 மணி நேரம் முன்
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam