சம்பந்தனின் புகழுடலுக்கு இந்திய உயர்ஸ்தானிகர் அஞ்சலி
புதிய இணைப்பு
மறைந்த தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பந்தனின் புகழுடலுக்கு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள செய்தியில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனுக்கு எச்.சி.சந்தோஷ் ஜா இறுதி அஞ்சலி செலுத்தினார்.
அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கப்டுகிறது.
தமிழர்களுக்கான அமைதி, கண்ணியம் மற்றும் இன நல்லிணக்கத்திற்கான அவரது அர்ப்பணிப்பு அன்புடன் நினைவுகூரப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு
இரா.சம்பந்தனின் பூதவுடல் சற்றுமுன் இலங்கை நாடாளுமன்றத்திற்கு எடுத்துவரப்பட்டது.
இந்நிலையில் சம்பந்தனின் புகழுடலுக்கு சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போன்றோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மேலும் சம்பந்தனின் புகழுடலுக்கு எதிர்வரும் (07.07.2024) ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு திருகோணமலை இந்துமயானத்தில் இறுதி அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.
முதலாம் இணைப்பு
மறைந்த தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பந்தனின் புகலுடலுக்கு கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ( Malcolm Ranjith) அஞ்சலி செலுத்தியுள்ளார்.
கொழும்பு - பொரளை ஏ.எப்.ரேமன்ட் மலர்ச்சாலையில் தனது அஞ்சலியை செலுத்தியுள்ளார்.
சம்பந்தனின் புகழுடலுக்கு எதிர்வரும் (07.07.2024) ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு திருகோணமலை இந்துமயானத்தில் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |