மன்னாரில் 8 இலட்சம் பெறுமதியான கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது
மன்னார்(Mannar) நகரில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் எட்டு இலட்சம் பெறுமதியான கேரளக் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலைத் தொடர்ந்து குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று(08.11.2024) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
விசேட நடவடிக்கை
“மன்னார் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் திருகோணமலைப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் இணைந்து மன்னார் நகரில் மேற்கொண்ட சோதனையில் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் சுமார் எட்டு இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவை மன்னார் நகர் பகுதியில் தன் வசம் வைத்துக்கொண்டு விற்பனை செய்வதற்காக வைத்திருந்தபோதே கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி சந்தேகநபர், அவரிடமிருந்த கேரள கஞ்சாவுடன் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan