இலங்கையில் மீண்டும் அச்சுறுத்தலாக மாறி வரும் கோவிட் தொற்றாளர்களின் அதிகரிப்பு
நாட்டில் மேலும் 503 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னதாக இன்று 1,185 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அதற்கமைய, இன்று இதுவரையில் 1,688 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 299,874 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களாக கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்தளவு பதிவாகி வந்த நிலையில்,தற்போது மீண்டும் அதிகளவிலான தொற்றாளர்கள் நாளாந்தம் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய , நாட்டில் நேற்று (26) கோவிட் தொற்றால் 48 பேர் மரணித்துள்ளனர்.
இதன்படி, நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 4,195 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri