முல்லைத்தீவில் பெண் உத்தியோத்தர் ஒருவருக்கு நிகழ்ந்த துயரம்
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கைவேலி கிராம பகுதியில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்திற்கு வேலைக்கு சென்று கொண்டிருந்த பெண் உத்தியோகத்தர் ஒருவரின் தாலிக்கொடி உந்துருளியில் பயணித்த கொள்ளையர்களால் அறுத்து செல்லப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (23) காலை இடம்பெற்றுள்ளதுடன் இது தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
பல இலட்சம் பெறுமதியான தாலிக்கொடியினை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாலிக்கொடியினை அறுத்து சென்ற கொள்ளையர்களின் உந்துருளி இலக்கம் குறித்த பொண்ணினால் அடையாளம் காணப்பட்டு புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
எதிர்பார்க்காத போட்டியாளர் பிக் பாஸ் 9 வீட்டிலிருந்து வெளியேற்றம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam
வீட்டிற்குள் ஊடுருவ முயற்சி: துணிந்து சண்டையிட்ட பள்ளி மாணவி: சோகத்தில் மூழ்கிய வேல்ஸ் News Lankasri