திடீர் திடீரென மாயமான தென்னிலங்கை அரசியல்வாதிகளின் மனைவிகள் - நடந்தது என்ன?
இலங்கையில் புதிய ஜனாதிபதி தெரிவாகி உள்ள நிலையில், அரசியல் மட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்துள்ளன.
கடந்த ஆட்சியில் முக்கியத்துவம் பெற்றிருந்த பல அரசியல்வாதிகள் தலைமறைவாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த அரசாங்கத்தின் முக்கிய அமைச்சு பதவிகளை வகித்த அரசியல்வாதிகளின் மனைவிகள், பிள்ளைகள் இரவோடு இரவாக வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதிய ஜனாதிபதியும் தப்பிச் செல்லும் அரசியல்வாதிகளும்
தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி அதிசொகுசு வாகனங்கள் அதிவேகமாக பயணித்த பல காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பதிவாகி உள்ளன.

இந்நிலையில், பாரிய ஊழல், மோசடிகள் மற்றும் பல குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்தியா, சிங்கபூர், தாய்லாந்து, டுபாய் போன்ற நாடுகளுக்கு அவர்கள் அவசரமாக சென்றுள்ளனர்.

இலங்கையில் ஊழலுக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப் போவதாக சூளுரைத்த அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக தெரிவாகி உள்ள நிலையில், இவ்வாறு பல அரசியல்வாதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.
பல அரசியல்வாதிகள் தமது குடும்பத்தை பாதுகாக்கும் நோக்கில் இவ்வாறு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மூன்று முடிச்சு சீரியலில் ஹீரோவாக நடிக்கும் நியாஸ் கான் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
விஜய்யை நேரில் பார்த்ததும் காவேரி செய்த செயல், சாரதாவிற்கு தெரிந்த உண்மை... மகாநதி சீரியல் Cineulagam