தமிழர் பகுதிகளில் பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கு கடையில் கடும் மோதல்
திருகோணமலை பயங்கரவாத புலனாய்வு துணைப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கும் பொலிஸ் சார்ஜனின் மகளுக்கும் இடையே ஏற்பட்டதாக கூறப்படும் உறவு தொடர்பில் வன்முறை ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலில், திருகோணமலை பயங்கரவாத புலனாய்வு துணைப் பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் துறைமுகப் பொலிஸார் வெட்டுக்காயங்களுடன் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பழைய திருகோணமலை பொலிஸ் வளாகத்திற்குள் மோதல் இடம்பெற்றதாகவும், இரு அதிகாரிகளின் உத்தியோகபூர்வ குடியிருப்புகளும் ஒரே கட்டிடத்தில் தனித்தனியாக அமைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடும் மோதல்
திருகோணமலை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி, பொலிஸ் சார்ஜனின் மகளுடன் நட்பாக இருந்ததாகவும், இதனால் கோபமடைந்த சார்ஜன்ட், வாக்குவாதத்தின் போது இருவரையும் விசாரித்ததாகவும், இதனால் மோதல் ஏற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இருவருக்கும் இடையிலான மோதல் காரணமாக திருகோணமலை பிரிவு பயங்கரவாத புலனாய்வு துணைப் பிரிவு கட்டடத்தின் முன்பக்க கண்ணாடி கதவு மற்றும் குளியலறையின் கண்ணாடி கதவு சேதமடைந்துள்ளதாக பொலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இரண்டு அதிகாரிகள் மோதிக்கொண்டபோது, பொலிஸ் சார்ஜனின் மகனும் மோதலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து பொலிஸ் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதுடன், திருகோணமலை துறைமுக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வெளியில் சாப்பிட நீ எதுக்கு இருக்க, மீனாவிடம் செந்தில் கேட்ட கேள்வி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam