இஸ்ரேலின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இடம்பெற்ற முக்கிய தொலைபேசி கலந்துரையாடல்
இஸ்ரேலின் (Israel) பாதுகாப்பு மந்திரி யோவ் கேலண்ட் மற்றும் அவரது அமெரிக்க பிரதிநிதி லொயிட் ஆஸ்டின் ஆகியோர் கடந்த நாட்களில் தங்கள் இரண்டாவது தொலைபேசி அழைப்பில் இராணுவ வரிசைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்ததாக இஸ்ரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தெஹ்ரானில் ஹனியே படுகொலை செய்யப்பட்டதற்கு ஈரானிடம் (Iran) இருந்து பதிலடி கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதற்கு முன்னதாகவே இந்தப் பேச்சுக்கள் எழுந்தன.
இந்நிலையில் குறித்த கலந்துரையாடலில் செய்தித் தொடர்பாளர் சப்ரினா சிங் கூறுகையில்,
" தற்போதைய மற்றும் எதிர்கால தற்காப்புப் படையின் மாற்றங்கள் மற்றும் இஸ்ரேலின் பாதுகாப்பு ஆகியவற்றை ஆதரிக்க பாதுகாப்பு திணைக்களம் நடவடிக்கை எடுக்கும்" என ஆஸ்டின் கேலண்டிடம் தெரிவித்துள்ளார்.
இடம்பெற்ற வாத - விவாதங்கள்
இந்த நடவடிக்கையானது, பிராந்தியத்திற்கு கூடுதல் படைகளை அனுப்புவதை உள்ளடக்கியதாக இருக்கும் என சப்ரினா சிங் கூறிய போதும் லொயிட் ஆஸ்டின் அது தொடர்பில் எந்த முடிவையும் எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், ஈரான் மற்றும் அதன் முகவர்களுக்கு எதிராக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே முன்னோடியில்லாத பாதுகாப்பு ஒத்துழைப்பு பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு மிகவும் முக்கியமானது என யோவ் கேலண்ட் சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri