கடவுச்சீட்டு வரிசைக்கு முற்றுப்புள்ளி!
குடிவரவு குடியகல்வு திணைக்கள வளாகத்தில் பல நாட்களாக காணப்பட்ட நெரிசல் நேற்று(30) நீங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை எவ்வித நெரிசலும் இல்லாமல், நேற்று வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள முடிந்ததாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
அனுமதி சீட்டு
தற்போது ஒரு நாளைக்கு ஆயிரம் அனுமதி சீட்டுகளை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ள காரணத்தால் கடவுசீட்டுக்கான வரிசை குறைந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

கோரிக்கை
மேலும் வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக குடிவரவு குடியகல்வு திணைக்கள வளாகத்திலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் பல நாட்களாக நீண்ட வரிசைகள் காணப்பட்டன.
குடிவரவு குடியகல்வு திணைக்களம் வைத்திருக்கும் வெற்று வெளிநாட்டு கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டதால் கடவுச்சீட்டு வழங்குவது கட்டுப்படுத்தப்பட்டது. இதனால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும், ஒக்டோபர் மாதம், புதிய இலத்திரனியல் கடவுச்சீட்டு அறிமுகம் செய்யப்படும் வரை இந்நிலை தொடரும் எனவும் அத்தியாவசிய காரணங்களுக்காக மாத்திரம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறும் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரி ஒருவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam