முல்லைத்தீவில் தும்பிக்கை வெட்டி கொல்லப்பட்ட யானை
முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட ஐயம்பெருமாள் பிரதேசத்தின் காட்டுப் பகுதியில் தும்பிக்கை வெட்டிய நிலையில் கொலை செய்யப்பட்ட யானையொன்று இனங்காணப்பட்டுள்ளது.
வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினாலே நேற்றுமுன் தினம் (16.10.2022) இந்த யானை அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த யானை இருபத்தைந்து வயது மதிக்கதக்க ஏழு அடி உயரமான ஆண் யானை என தெரிவிக்கப்படுகின்றது.
யானையின் தந்தத்தை கைப்பற்றும் நோக்கத்துடன் இந்த மோசமான செயல் முன்னெடுக்கப்பட்டிருக்கலாம் என வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு வனஜீவராசிகள் திணைக்களத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில் நீதிமன்றத்தில் அறிக்கையொன்று தாக்கல் செய்யபட்டுள்ளதாகவும் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



