விவசாயக் கிணற்றுக்குள் விழுந்து யானை பரிதாபமாக உயிரிழப்பு (Photo)
புத்தளம் - மஹாகும்புக்கடவல பகுதியில் காட்டு யானையொன்று விவசாயக் கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்துள்ள நிலையில் யானைகுட்டி உயிருடன் மீட்கப்பட்டுள்ளது என வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும்,உயிரிழந்த யானை 25 வயது மதிக்கத்தக்கது எனவும் குட்டி யானை 4 மாதக் குட்டி எனவும் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தமைக்கான காரணம்
குறித்த காட்டுயானை மூன்று நாட்களுக்கு முன்பாக இரவு நேரத்தில் உணவு தேடி கிராமத்திற்கு உட்புகுந்துள்ள வேளை விவசாயக் கிணற்றினுள் விழுந்தாகவும் வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், இவ்வாறு உயிரிழந்த யானைக்கு நிகாவெரெட்டிய மிருக வைத்தியரினால் இன்று (21) பிரேத பரிசோதனை இடம்பெறுகின்றது.
இந்த நிலையில் உயிருடன் மீட்கப்பட்ட யானைகுட்டியை அநுராதபுரம் யானைகள் சரணாலயத்தில் ஒப்படைப்பதாக வனஜீவராசிகள்
கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.



