திருகோணமலையில் வயோதிப பெண்ணொருவர் மரணம்
திருகோணமலை - சாந்திபுரம் பகுதியில் வாய்க்காலில் குளிக்கச்சென்ற வயோதிபப் பெண்ணொருவர் விழுந்து மரணமடைந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இன்று (24) பிற்பகல் சடலம் வாய்க்காலில் மிதந்து கொண்டிருக்கும்போது பிரதேச இளைஞர்களால் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட பெண் திருகோணமலை -சாந்திபுரம் பகுதியைச் சேர்ந்த அயிலந்தன் பெருமாள் (78வயது) எனவும் தெரியவருகின்றது.
தனது மகனின் வீட்டுக்கு சென்று இன்று காலை 11 30 மணியளவில் வீட்டிற்கு முன்னால் உள்ள வாய்க்காலுக்கு குளிக்கச் சென்ற போது தவறுதலாக விழுந்து வாய்க்கால் ஊடாக மிதந்து வந்ததாகவும், இதனையடுத்து சடலம் மீட்டுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது .
உயிரிழந்த வயோதிப பெண்ணின் சடலம் தற்போது அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பி.சி.ஆர் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும், விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.