புத்தாண்டில் ஓடும் தொடருந்தில் ஏறி காலை இழந்த நபர்!
ஓடும் தொடருந்தில் ஏற முயன்ற வயோதிபர் ஒருவர் தவறி விழுந்து படுகாயமடைந்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பகுதியான ரிதிதென்னை தொடருந்து நிலையத்தில் வைத்து நேற்று(13) இடம்பெற்றுள்ளது.
இதில், 60 வயதுடைய நபர் ஒருவரே காயமடைந்துள்ளார்.
மேலதிக விசாரணை
காயமடைந்தவர், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் வயோதிபரின் இடது கால் சத்திர சிச்சையின் பின்னர் அகற்றப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற தொடருந்து ரிதிதென்னை நிலையத்தில் நிறுத்தி விட்டு மீண்டும் செல்லும் போது வயோதிபர் ஒருவர் ஏற முற்பட்ட போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam
