சிறுமியை தவறான முறைக்கு உட்படுத்திய இராணுவ உத்தியோகத்தருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
சிறுமி ஒருவரை தவறான நடத்தைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் முல்லைத்தீவு - முள்ளியவளை (Mullaitivu - Mulliyawalai) பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள பகுதியில் கடமையாற்றும் இராணுவ
உத்தியோகத்தரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை கடந்த 03ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, கைது செய்யப்பட்டவர் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது எதிர்வரும் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேகநபர்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தம்புள்ள (Dambulla) கலேவெல பகுதியினை சொந்த இடமாக கொண்ட குறித்த இராணுவ உத்தியோகத்தர் வீட்டில் தங்கி நின்றவேளை தனது உறவு முறையான 13 வயதுடைய சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், கலேவெல பொலிஸில் வழக்கு பதியப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் முள்ளியவளை பொலிஸாருக்கு குறித்த சந்தேக நபரை கைது செய்ய தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், குற்றம் தொடர்பிலான வழக்கு விசாரணை தம்புள்ள நீதிமன்றில் இடம்பெற்று
வரும் நிலையில் சந்தேக நபரை தம்புள்ள நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
நடிகை குஷ்புவா இது.. 20 வயதில் அடையாளம் தெரியாத அளவுக்கு எப்படி இருந்திருக்கிறார் பாருங்க! Cineulagam