ஜனாதிபதி தலைமையில் நாளை சர்வகட்சிக் கூட்டம்
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் சர்வகட்சிக் கூட்டம் நாளை (26) மாலை 4.00 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி தலைமையில் சர்வக்கட்சிக்கூட்டம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறும், இந்த சர்வகட்சிக் கூட்டத்தில் சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபகச, மைத்திரிபால சிறிசேன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் உட்பட நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் பதவியேற்ற பின்னர், 2022 டிசம்பர் 13 ஆம் திகதி நடத்தப்பட்ட கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டு கட்சித் தலைவர்களின் இணக்கப்பாடு இந்தக் கூட்டத்தில் எட்டப்படவுள்ளது எனவும் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு கூறியுள்ளது.
நேட்டோ தலைவருடன் சந்திப்பு... பிரித்தானியா உட்பட 8 நாடுகள் மீதான வரியை ரத்து செய்த ட்ரம்ப் News Lankasri
புருஷனா இருக்குறது முக்கியம் இல்ல.. சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் புருஷன் படத்தின் ப்ரோமோ Cineulagam
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan