தாய் வெளிநாட்டில்! சிறிய தாயாரின் வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட 11 வயது சிறுமி
மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 11 வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பெரியகல்லாறு 02ஆம் குறிச்சி, நாவலர் வீதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்தே இந்த சடலம் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
சிறுமியின் தாயார் வெளிநாட்டிற்கு சென்றுள்ள நிலையில் குறித்த சிறுமி தனது சிறிய தாயாரின் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்னர் குறித்த சிறுமி அவரது அம்மமாவின் வீட்டில் இருந்தபோது தாக்கப்பட்டதாக கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் மீட்கப்பட்டு கல்லாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து வைத்தியசாலையில் இருந்த சிறுமியை அவரது சிறிய தாயார் நேற்று அழைத்துச் சென்ற நிலையில் இன்று காலை சிறிய தாயார் வீட்டிலிருந்து சடலமாக மீட்க்கப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
மரணம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த சிறுமியின் மரணம் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri