கிழக்கில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகளவு மழைவீழ்ச்சி
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அம்பாறை பகுதியில் 38 மி.மீ மழை பெய்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் (நீரியியல் மற்றும் பேரிடர் மேலாண்மை) பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
அவர் இத்தகவலை இன்று (9) காலை வெளியிட்டுள்ளார்.
வெளியேற்றப்படும் நீர்
மேலும், பிற பெரும்பாலான இடங்களில் 10 மில்லி மீட்டருக்கும் குறைவான மழைப்பொழிவு இருந்ததாகவும், இதன் விளைவாக, ஆறுகளில் நீர் மட்டத்தில் எந்த அதிகரிப்பும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இருப்பினும், 73 முக்கிய நீர்த்தேக்கங்களில் 28 மற்றும் 22 நடுத்தர அளவிலான நீர்த்தேக்க நீர் இன்னும் வெளியேற்றப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
யான் ஓயா மற்றும் தெதுறு ஓயா நீர்த்தேக்கங்களில் நீர் வெளியேற்றம் கணிசமாக அதிகரிக்கப்பட்டாலும், எந்த நதிப் படுகையிலும் ஆபத்தான நீர் வெளியேற்றம் இல்லை என்று சூரியபண்டார கூறியுள்ளார்.