வைத்தியசாலையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு: அம்பாறையில் சம்பவம்
அம்பாறை - கல்முனை ஆதார வைத்தியசாலையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று(01.08.2023) கல்முனை ஆதார வைத்தியசாலையின் மனநோய் சிகிச்சைப்பிரிவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் மத்தியமுகாம் பகுதியை சேர்ந்த 28 வயதுடைய ஏ.சி.எம் ஆபீத் என்ற திருமணமான இளைஞனே உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
இ்ந்நிலையில் மரணமடைந்தவர் மனநோய் சிகிச்சைக்காக கல்முனை ஆதார வைத்தியசாலையின் மனநோய் சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வருகை தந்த கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் விசாரணைகளை மேற்கொண்டதோடு, மரணமடைந்தவரின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |