சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கைக்கு விடுத்துள்ள வலியுறுத்தல்

Government Of Sri Lanka World
By Amal Oct 28, 2026 12:04 AM GMT
Report

இலங்கையில் ஒருங்கிணைக்கப்பட்ட குற்றங்கள் தடுப்புச் சட்டமூலத்தை அரசாங்கம் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty International) வலியுறுத்தியுள்ளது.

தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தால் கொண்டுவரப்படும் மிகவும் ஆபத்தான சட்டங்களில் இதுவும் ஒன்று என சர்வதேச மன்னிப்புச் சபை எச்சரித்துள்ளது.

சந்தேக நபர்களை வழக்கு விசாரணையின்றி 2 ஆண்டுகள் வரை தடுத்து வைக்க இந்தச் சட்டம் வழிவகுக்கிறது உதவி பொலிஸ் அத்தியட்சகர் (ASP) நிலைக்கு மேல் உள்ள அதிகாரிகளிடம் அளிக்கப்படும் வாக்குமூலங்களை நீதிமன்றத்தில் சாட்சியமாக ஏற்றுக்கொள்ள ஒப்புதலளிக்கிறது.

தொலைபேசி பதிவுகள் 

பிடியாணை இன்றியே பொலிஸார் தேடுதல் நடத்தவும், நீதிமன்ற உத்தரவின்றி தொலைபேசி பதிவுகள், இருப்பிடத் தரவு (Location) மற்றும் தனிநபர் தகவல்களைப் பெறவும் அதிகாரமளிக்கிறது.

சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கைக்கு விடுத்துள்ள வலியுறுத்தல் | Amnesty International Urge Sri Lanka

நீதிமன்ற நடவடிக்கைகளைச் செய்தி ஊடகங்கள் வெளியிடுவதைக் கட்டுப்படுத்தும் சரத்துகள் இதில் அடங்கியுள்ளன.

ஒருவரின் ஆடை, பச்சை குத்துதல் (Tattoos), கை சமிக்ஞைகள், பேசும் மொழி மற்றும் பழகும் நபர்களை வைத்தே அவர் குற்றக் குழுவைச் சேர்ந்தவரா எனத் தீர்மானிக்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் அளிப்பது பாரிய மனித உரிமை மீறலாகும் என்றும் மன்னிப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

இந்த சட்டத்தின்padi, குற்றம் சாட்டப்பட்டவரே தான் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதை நிரூபிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்.

பொலிஸார் கேட்கும் தகவல்களை வழங்கத் தவறினால் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ. 200,000 அபராதம் விதிக்க இந்தbசட்டம் வழி செய்கிறது.

நாமலுக்கு ஆபத்தாகப் போகும் 26 குற்றப்பத்திரிக்கைகள்.. அதிர்ச்சியில் ராஜபக்ச தரப்பு

நாமலுக்கு ஆபத்தாகப் போகும் 26 குற்றப்பத்திரிக்கைகள்.. அதிர்ச்சியில் ராஜபக்ச தரப்பு

சட்டமூலம் 

இந்த நிலையில்,பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) மிகவும் மோசமான அம்சங்களை மீண்டும் கொண்டுவந்து, அவற்றை விரிவான குற்றங்களுக்கும் விரிவுபடுத்த இந்த சட்டம் முயல்கிறது.

சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கைக்கு விடுத்துள்ள வலியுறுத்தல் | Amnesty International Urge Sri Lanka

தன்னிச்சையான கைதுகள், சித்திரவதைகள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு இது வழிவகுக்கும். எனவே இலங்கை இந்த ஆபத்தான பாதையைக் கைவிட்டு இந்த சட்டமூலத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். என்று மன்னிப்பு சபையின் தென்னாசிய பணிப்பாளர் ஸ்மிருதி சிங் வலியுறுத்தியுள்ளார்.

ஏற்கனவே, இந்த சட்டமூலத்திற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஆகியவையும் பலத்த எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

முன்னதாக, 2026 அக்டோபர் 6 அன்று வர்த்தமானியில் வெளியிடப்பட்ட இந்தச் சட்டமூலம், அக்டோபர் 20 அன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு தற்போது முதலாம் வாசிப்பு நிலையில் உள்ளது.

அடுத்த வருடம் நாட்டில் பசியால் போராட்டம் உருவாகுமா! எதிர்க்கட்சிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள சவால்

அடுத்த வருடம் நாட்டில் பசியால் போராட்டம் உருவாகுமா! எதிர்க்கட்சிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள சவால்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, வட்டக்கச்சி, கிளிநொச்சி

08 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் சின்னாலடி

11 Nov, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Mississauga, Canada

15 Nov, 2016
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, சங்குவேலி

27 Oct, 2013
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
21ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US