பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்யுமாறு சர்வதேச மன்னிப்புச் சபை மீண்டும் வலியுறுத்து
பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்யுமாறு சர்வதேச மன்னிப்புச் சபை மீண்டும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
தற்காலிக அடிப்படையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டு நாற்பத்து மூன்று ஆண்டுகள் கடந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.
சிறுபான்மை மக்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், மாற்று கருத்துக்களை வெளியிடுவோர் உள்ளிட்டோரை அடக்குமுறைக்கு உட்படுத்தவும் துன்புறுத்தவுமே இந்த சட்டத்தை இலங்கை அரசாங்கம் பயன்படுத்துகின்றது என தெரிவித்துள்ளது.
இந்த சட்டத்தில் திருத்தங்களை செய்வதாக அரசாங்கம் உறுதிமொழி வழங்கியுள்ள போதிலும், உத்தேச திருத்தங்கள் இலங்கையின் அரசியல் சாசனத்திற்கும், சர்வதேச மனித உரிமை சட்டங்களுக்கு அமைவானதாக இல்லை எனவும், இந்த உத்தேச திருத்தங்களினால் மனித உரிமைகளை பாதுகாக்க முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே குறித்த சட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது.




