இந்திய அமைச்சர் அமித்ஷாவின் இன அழிப்பு கருத்து! பின்னணியில் பிரித்தானிய தமிழர் அமைப்பு(Video)
தமிழ் மக்களுக்கான உரிமைகளை இந்தியா பெற்றுகொடுக்க வேண்டும் என்ற பிரித்தானிய தமிழர் பேரவையின் கருத்து மற்றும் வேலைத்திட்டத்தின் ஒருவித முன்னேற்பாடாக அமித்ஷாவின் கருத்து அமைந்தது என்று பிரித்தானிய தமிழர் பேரவையின் பொது செயலாளர் ரவி கூறியுள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில்,“நாடுகள் என்பது தனியாக தங்களுடைய நலன்களை பார்க்கும். அதேவேளை பாதுகாப்பு, பொருளாதாரம் தொடர்பான விடயங்களையும் பார்க்கும்.
அந்த நாடுகள் எவ்வாறு பூகோள அரசியலை எதிர்கொள்கின்றது என அறிந்து அதை பயன்படுத்திக்கொண்டு எமக்கு தேவையான நகர்வுகளை செய்ய வேண்டும்.
இந்தியா மற்றும் வெளிநாடுகளிலுள்ள வெளியுறவு அதிகாரிகள் உட்பட இந்தியாவின் அரசியல் கட்சிகள் என்பவற்றில் இலங்கை தமிழர்களுக்கு நடந்த கொடுமைகள் அவர்களின் இழப்புக்கள் தொடர்பில் பல ஆதாரபூர்வமான அறிக்கைகள் சமர்பிக்கப்பட்டுள்ளன.
மேலும் கூறுகையில் தமிழ் மக்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொடுக்க இந்தியா உதவி செய்யுமானால் இந்தியாவின் பாதுகாப்பிற்கும் சுபீட்சத்திற்கும் உறுதுணையாக இருப்பார்கள்.” என தெரிவித்துள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
