ஈழத்தமிழர் படுகொலையால் இந்தியாவிற்கு பெரும் பாதிப்பு! அமித்ஷாவிற்கு குவியும் ஆதரவு(Video)
இலங்கையில் நீண்டகாலமாக தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற யுத்தத்தில், முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தமானது இனப்படுகொலையை அப்பட்டமாக காட்டிய ஒரு விடயம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையே என இந்திய பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினரும், இந்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா ஏற்றுக்கொண்டமைக்கு நன்றிகளை தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி சோனியா காந்தியின் ஆட்சி காலத்தில், தீர்க்கமான சிந்தனை அற்ற நிலையில் ஈழமக்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு எதிராக அமித்ஷா தற்போது குரல் கொடுத்துள்ளார்.
தீர்க்கமான சிந்தனை அற்ற நடவடிக்கையால் ஈழமக்கள் மாத்திரம் அல்லாது இந்தியாவின் பாதுகாப்பும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கையில் யுத்தம் இடம்பெற்று மௌனிக்கப்பட்டதன் பின்னர் இந்தியாவிற்கு எதிரான சூழ்ச்சிகள் இலங்கையில் இடம்பெறுகின்றன." என தெரிவித்துள்ளார்.
தொழில் தொடங்குவதற்குள் குணசேகரன், ஜனனிக்கு ஏற்படுத்திய பெரிய பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
Chelsea அணியை விற்றத் தொகை... ரஷ்ய கோடீஸ்வரருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்த பிரித்தானியா News Lankasri