இலங்கைக்கு அமித்ஷாவின் பகிரங்க எச்சரிக்கை! காரணமாகும் றோவின் ஆதாரங்கள் (Video)
இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்தை இலங்கை அரசாங்கத்திற்கான எச்சரிக்கையாக பார்க்கலாம் என புலனாய்வு செய்தியாளர் எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையே என இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், மோடியை இயக்குவதே அமித்ஷா தான். மிக அதிகமாக அரசியல் ரீதியாக மோடியை இயக்குவது அமித்ஷா மற்றையது அஜித் தோவல். இந்த இருவரும் மிகவும் இணைந்தவர்கள்.
அதனால் அவர்களிடம் தரவு இருக்கிறது தகவல் இருக்கிறது. ஆதாரம் இருக்கிறது. இது ஒருவேளை இலங்கையை அடிபணிய வைக்கலாம். அமித்ஷாவின் கருத்தென்பதை பத்தோடு பதினொன்றாக பார்க்க முடியாது.
அவர் அந்த கருத்தை வெறும் வாய் வார்த்தையாக சொல்லவில்லை. அதில் நிறைய விடயங்கள் புதைந்துள்ளன. இதனை இலங்கை அரசாங்கத்திற்கான எச்சரிக்கையாக பார்க்கலாம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான இன்னும் பல விடயங்களுடன், றோவிடம் இருக்கும் ஆதாரங்கள் குறித்தும் விரிவான தொகுப்புடன் வருகிறது ஊடறுப்பு,
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 20 மணி நேரம் முன்
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri
ட்ரம்பால் நியூயார்க்கின் மேயரைக் கூட நியமிக்க முடியாது: ஈரான் துணை வெளியுறவு அமைச்சர் பதிலடி News Lankasri
வாழ்வில் உச்சகட்ட மகிழ்ச்சியை அனுபவிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுவா? Manithan