இலங்கைக்குள் அமெரிக்காவின் உளவு விமானம்
இலங்கையை சுற்றியுள்ள கடலில் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு உளவு விமானம் ஒன்று வழங்கப்பட உள்ளது.
Beech King Air 360er ரக புத்தம் புதிய விமானத்தை அமெரிக்கா வழங்கவுள்ளது. எதிர்வரும் ஆண்டு ஜூன் அல்லது ஜூலை மாதத்திற்குள் குறித்த விமானம் இலங்கைக்கு கொண்டுவரப்படும்.
வான்வழியாக கடல்சார் கண்காணிப்பை மேற்கொள்ளும் திறன் கொண்ட அமெரிக்க பாதுகாப்பு படைகளுக்கு சொந்தமான இடைமறிப்பு விமானம் கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு வந்துள்ளது.
உளவு விமானம்
இவ்வாறு வந்திறங்கிய விமானம் சேலஞ்சர் 605 என்ற கண்காணிப்பு விமானமாகும். இது விமானப்படை விமானிகள் மற்றும் இலங்கை முப்படை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க பயன்படுத்தப்பட்டது.

மேலும், முப்படையைச் சேர்ந்த மேலும் பத்து அதிகாரிகள் அடுத்த சில மாதங்களில் பயிற்சிக்காக அமெரிக்கா செல்ல உள்ளனர்.
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam