அமெரிக்காவின் 6 முக்கிய அமைப்புகள் இலங்கைத் தமிழர் தொடர்பில் கடிதம்
இலங்கையின் 75 வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில், அமெரிக்காவின் 6 முக்கிய அமைப்புகள் அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளன.
அதில் ஒரு சுதந்திர வாக்கெடுப்பு கோரியும், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்புவதற்கான அமெரிக்காவின் அழுத்தம் குறித்தும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆயுதப் போரின் இறுதிக்கட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,46,679 ஆக இருக்கலாம் என்றும் அந்த அமைப்புகள் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளன.

சிங்கள பௌத்த தேசியவாத அரசாங்கங்கம்
சுதந்திரத்திற்குப் பின்னர் அடுத்தடுத்து சிங்கள பௌத்த தேசியவாத அரசாங்கங்களின் கீழ் தொடர்ச்சியான ஒடுக்குமுறை மூலம் இலங்கை அரசால் தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன.
இலங்கையில் சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கு, நிரந்தர அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை என்ற விடயங்களில் பிராந்தியத்திற்கு மட்டுமல்ல பரந்த உலகிற்கும் கவலை தருவதாக அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.

எனவே ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்க அமெரிக்க நிர்வாகத்தை வலியுறுத்துங்கள்.
சுதந்திர வாக்கெடுப்பு
ஈழத் தமிழர்களின் அரசியல் நிலையை ஜனநாயக ரீதியாகவும் அமைதியாகவும் தீர்மானிக்க சுதந்திர வாக்கெடுப்பு நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கையின் பரிந்துரையைத் தொடர, ஐக்கிய
நாடுகள் பாதுகாப்புச் சபையில் அமெரிக்காவின் நிலைப்பாட்டைப் பயன்படுத்த
அமெரிக்க நிர்வாகத்தை வலியுறுத்துங்கள் என்று அமெரிக்காவின் 6 தமிழ்
அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam