உக்ரைனில் இரண்டு அமெரிக்கர்கள் ரஷ்யப் படைகளால் சிறைபிடிப்பு
உக்ரைனில் இரண்டு அமெரிக்கர்கள் ரஷ்யப் படைகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னாள் அமெரிக்கப் படைவீரர்களான 39 வயதான அலெக்சாண்டர் ட்ரூக் மற்றும் 28 வயதான ஆண்டி ஹுய்ன் ஆகியோர் உக்ரைனில் சண்டையிட்டபோது சிறைபிடிக்கப்பட்டதாக தி டெலிகிராப் தெரிவித்துள்ளது.
இந்த தகவலட உறுதிசெய்யப்பட்டால், போர் தொடங்கியதில் இருந்து ரஷ்ய போர்க் கைதிகளாக மாறிய முதல் அமெரிக்கப் படைவீரர்கள் இவர்கள் ஆவார்கள் என்பதும் குறிப்பித்தக்கது.
கார்கிவ் அருகே நடந்த போரில் சிறைபிடிப்பு
கடந்த வியாழன் அன்று கார்கிவ் அருகே உள்ள இஸ்பிட்ஸ்கே கிராமத்தில் நடந்த ஒரு போரின் குறித்த இருவரும் சிறைபிடிக்கப்பட்டதாக பெயர் குறிப்பிட விரும்பாத அவர்களின் நண்பர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
போரின் போது இருவர் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அவர் கூறினார், எனினும், பின்னர் மேற்கொண்ட தேடலின் போது அவர்களின் உடல்கள் அல்லது அவர்களின் உபகரணங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், கார்கிவ் அருகே இரண்டு அமெரிக்கப் படைவீரர்கள் சிறைப்பிடிக்கப்பட்டதாக ரஷ்ய டெலிகிராம் சேனலில் ஒரு செய்தி வெளியான போது அவரது சந்தேகம் பின்னர் அதிகரித்ததாக கூறப்படுகின்றது.
போர் அனுபவம் இல்லாத வீரர்
அலபாமாவைச் சேர்ந்த ட்ரூக் அமெரிக்க இராணுவத்தில் இணைந்துகொண்டதுடன், ஈராக்கில் ஒரு ஸ்டாஃப் சார்ஜெண்டாக பணியாற்றினார்.
வியட்நாம் பெற்றோருக்குப் பிறந்த ஹுய்ன், அலபாமாவில் வசித்து, கல்லூரியில் ரோபோட்டிக்ஸ் படித்து வந்தார். அவர் முன்னர் அமெரிக்க கடற்படையில் நான்கு ஆண்டுகள் பணியாற்றினார். எனினும் போர் அனுபவம் இல்லை என கூறப்படுகின்றது.