அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கியபோது விபத்து!
ஸ்பெயினின் பார்சிலோனா நகரிலிருந்து சிக்காகோ நகருக்குச் சென்ற அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கியபோது ரயர் வெடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த சம்பவமானது நேற்று(20.10.2026) சிக்காகோ ஓ'ஹேர் சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோளாறு
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான ஃப்ளைட் 41 என்ற போயிங் 787-800 ரக விமானத்தில் 234 பயணிகள் மற்றும் 11 விமானப் பணியாளர்கள் என மொத்தம் 245 பேர் பயணம் செய்துள்ளனர்.

விமானம் தரையிறங்குவதற்கு முன்னர், அதன் வலது பக்கப் பிரேக்கில் கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானப் பணியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதனை அடுத்து விமான நிலையக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்டு, “எங்கள் விமானத்தின் வலது பக்கப் பிரேக் பழுதுபட்டு உரசக்கூடும்” என விமானி தெரிவித்துள்ளார்.
முழுமையாக ஆய்வு
விபத்துக்குள்ளான விமானம் தற்காலிகமாக சேவையிலிருந்து விலக்கப்பட்டுள்ளதுடன், அதன் பராமரிப்புக் குழுவினர் விமானத்தை முழுமையாக ஆய்வு செய்து வருவதாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, அவசர நிலையை கருத்திற்கொண்டு விரைவாகச் செயற்பட்டு, ஓடுபாதையில் விமானத்தை விமானிகள் வெற்றிகரமாக நிறுத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது.
மனைவியுடன் ஏற்பட்ட தகராறு: 1700 அடி மலையில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட கணவன் News Lankasri
20ஆம் ஆண்டு திருமணக் கொண்டாட்டத்தில் சூர்யாவின் வித்தியாசமான ஸ்டைல்! பின்னணி என்ன தெரியுமா? Manithan