பிரான்ஸில் கட்டுக்கடங்காத வன்முறை சம்பவங்கள் - ஈழத்தமிழர்களுக்கு சொந்தமான கடைகள் சூறையாடல்
பிரான்ஸில் இடம்பெற்ற தொடர் வன்முறை சம்பவங்களில் தமிழர்கள் உட்பட பலரின் வர்த்தக நிலையங்கள், கடைகள் என்பன உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளன.
மாணவர்கள் அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம், தற்போது கொள்கையர்களின் கரங்களில் சிக்கியுள்ளதாக பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய, கடந்த 17ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பங்களின் போது பாரிஸிலுள்ள ஈழத்தமிழருக்கு சொந்தமான இரண்டு நகைக் கடைகள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளன.
தங்க நகைகள்
இதன் காரணமாக பல இலட்சம் யூரோ பெறுமதியான தங்க நகைகள் உட்பட பல சொத்துக்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரான்ஸின் பாரிஸ், மார்சேய், லியோன் மற்றும் லிமோஜ் உள்ளிட்ட நகரங்களில் கடைகள் சூறையாடப்பட்டதோடு, வாகனங்களுக்கும் பொதுக் கட்டிடங்களுக்கும் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளன.
வன்முறை சம்பவங்கள்
பிரான்சின் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை, அடிப்படை வசதிக்குறைபாடு போன்ற பிரச்சினைகளுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட மாணவர் போராட்டங்கள், பின்னர் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிரான நாடளாவிய ஆர்ப்பாட்டங்களாக விரிவடைந்தன.

இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கொள்ளைக் கும்பல் மற்றும் நாசகார கும்பலங்கள் பிரபலமான வர்த்தக நிலையங்களுக்குள் புகுந்து பாரிய கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலைமை எல்லை மீறிச் சென்றமையினால் பாரிஸின் சில பகுதிகளில் நேற்றிரவு ஊரடங்கு சட்டம் நடைமுறைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புலம்பெயர்ந்தோர் வேலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த நபர்: பல்பொருள் அங்காடியின் பதிலடி News Lankasri