மீண்டும் ரஷ்யாவை எச்சரித்த அமெரிக்கா! வலுக்கும் உக்ரைன் விவகாரம்
ரஷ்ய ஜனாதிபதி விளாதிமீர் புதின் நெருப்புடன் விளையாடுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைனுடன் அமைதி ஒப்பந்தம் இறுதி செய்வதற்கான முயற்சிகளைத் தடுத்து நிறுத்தியதற்காக விளாதிமிர் புடின் மீது ட்ரம்ப் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள ட்ரம்ப்,
ரஷ்யா - உக்ரைன்
“நான் மட்டும் இல்லையென்றால், ரஷ்யாவிற்கு ஏற்கெனவே நிறைய மோசமான சம்பவங்கள் நடந்திருக்கும் என்பதை புடின் உணரவில்லை.
நான் சொல்வது மிகவும் மோசமானது. அவர் நெருப்புடன் விளையாடுகிறார்!” என தெரிவித்துள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டிலிருந்து ரஷ்யா - உக்ரைன் இடையே மிகவும் மோசமான அளவில் போர் நடைபெற்று வருகிறது.
அமெரிக்க ஜனாதிபதியாக தான் பதவியேற்றதும் இரு நாடுக்கு இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவருவேன் என்று ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
அதன்படி, இரு நாட்டு தலைவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அதில் முடிவு எட்டப்படவில்லை. ஆனால், ட்ரம்ப்பின் தீவிர அமைதி முயற்சிக்கிடையிலும் உக்ரைன் மீது ரஷ்யா தொடா்ந்து தாக்குதல் நடத்திவருகிறமை குறிப்பிடத்தக்கது.

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 2 நாட்கள் முன்

கூலி திரைப்படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ்.. ரிலீஸுக்கு முன்பே இத்தனை கோடிகள் வந்துவிட்டதா Cineulagam

சீனா, பாகிஸ்தானுக்கு பீதி தரும் செய்தி... ஒலியை விட வேகமான இந்த ஏவுகணையை சோதிக்கும் இந்தியா News Lankasri

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri

Brain Teaser Maths: சிதறும் சிந்தனை கொண்டவரால் இப்புதிரை தீர்க்க முடியாது-உங்களுக்கு முடியுமா? Manithan
