அமெரிக்க - இலங்கை உறவால் ஏமாறும் தமிழ் மக்கள்
தமிழர்களின் பிரச்சினைக்காக அமெரிக்கா(USA) தீர்வு காணும் என்று பொய்யான நம்பிக்கையில் தமிழ் மக்களின் பலர் இருக்கின்றார்கள் என இலங்கை மூத்த பத்திரிகையாளர் அ.நிக்ஸன் தெரிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னரான அரசியல் என்ற தொனிப் பொருளில் இடம்பெற்ற கருத்தரங்க ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா ஒரு பொதும் ஜே.வி.பி அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ளாது என்ற கருத்து தமிழ் மக்களிடையே காணப்படுகின்றது.
எனவே சீனா இந்தியா பக்கம் அநுரகுமார திசாநாயக்க தன் கவனத்தை திருப்பலாம் என்ற செய்திகள் சிங்கள ஊடகங்களில் வெளிவருவதை காணகூடியதாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச புவிசார் அரசியல் வியூங்களுக்குள் விழுந்துவிடாமல் சர்வதேசச் சட்டங்கள் ஊடாகத் தமிழ்த் தரப்பு செயற்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அவர் பாலஸ்தீன போராட்டம் தொடர்பாகவும் அமெரிக்காவின் இரட்டை கொள்கைகள் குறித்தும் விளக்கமளித்துள்ளார்.
ஜே.வி.பியுடன் அமெரிக்கா கூட்டுச் சேர்ந்து செயற்படும் சந்தர்ப்பங்கள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இமாலயப் பிரகடனத்தின் தொடர்ச்சியை அநுரகுமார அரசாங்கம் கையாளவுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான விளக்கங்களை கீழுள்ள காணொளியில் காணலாம்...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

பிறந்து 15 நாள் ஆன குழந்தையை ஃப்ரிட்ஜில் வைத்த தாய்.., பின்னால் இருக்கும் அதிர்ச்சி காரணம் News Lankasri

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் வழுக்கி விழுந்த தமிழ், பதறி அடித்து ஓடிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam
