இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்
அமெரிக்கா விதித்திருந்த இறக்குமதி வரியை 44 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக குறைக்க எதனையும் வழங்க இலங்கை ஒப்புக் கொள்ளவில்லை என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் நன்மைகளை கொண்டு வருவதற்கான நல்லெண்ண பேச்சுவார்த்தைகளுக்கான அங்கீகாரம் இந்த வரி குறைப்பாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஆளுநர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை இதுவரை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது.
குறிப்பிடத்தக்க முன்னேற்றம்
இலங்கைக்கு ஒரு சிறந்த தீர்வை பெறுவதற்கான நோக்கத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும். நாங்கள் இதுவரை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளோம்.
மேலும் நல்ல முன்னேற்றத்தை அடைய விரும்புகிறோம். பேச்சுவார்த்தை வழிகள் திறந்திருக்கும். இலங்கைக்கு ஒரு சிறந்த தீர்வை பெறுவதற்கான நோக்கத்துடன் நாங்கள் தொடர்ந்து ஈடுபடுவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நல்லெண்ண பேச்சுவார்த்தை
44 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாகக் வரியை குறைக்க அமெரிக்காவிற்கு இலங்கை என்ன வழங்கியது என்ற கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, “இதுவரை எதுவும் ஒப்புக் கொள்ளப்படவில்லை.
இரு நாடுகளுக்கும் நன்மைகளை கொண்டுவருவதற்கான நல்லெண்ண பேச்சுவார்த்தைகளின் அங்கீகாரமாகவே இந்த குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.

விவாகரத்து செய்திக்கு பதிலடி கொடுத்த நயன்தாரா.. விக்னேஷ் சிவன் உடன் இருக்கும் அப்படி ஒரு போட்டோவை வெளியிட்டு விளக்கம் Cineulagam

செங்கடலில் ஹூவுதி படையினர் தாக்குதல்: கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்: கடத்தப்பட்ட ஊழியர்கள் News Lankasri
