யாழில் மன அழுத்தம் காரணமாக யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!
யாழ். புத்தூர் - வாதரவத்தை, வீரவாணி பகுதியில் யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.
கிளிநொச்சி - முழங்காவில் பகுதியைச் சேர்ந்த லோகவேந்தன் றுகிந்தா (வயது 21) என்ற யுவதியே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.
உடற்கூற்று பரிசோதனை
இது குறித்து மேலும் தெரியவருகையில், முழங்காவில் பகுதியைச் சேர்ந்த குறித்த யுவதி புத்தூர் பகுதியில் உள்ள உறவினரின் வீட்டில் தங்கியிருந்து யாழ்ப்பாணத்தில் தாதியர் பயிற்சிநெறியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் மன அழுத்தம் காரணமாக தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam
