ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் அமெரிக்க தூதுவர் வெளிப்படுத்திய நம்பிக்கை
பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சன்ங் (Julie Chung) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளார்.
இன்று (30) பிற்பகல் கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் திருமதி ஜூலி சன்ங் மற்றும் ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கு அமெரிக்கா ஆதரவளிப்பதாக அந்நாட்டில் இருந்து வருகை தந்த உயர்மட்ட இராஜதந்திரக் குழு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க நடவடிக்கை
அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடனும் பல சந்தர்ப்பங்களில் மனிதாபிமான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாட்டுக்காகவும் மற்றும் அதன் மனிதாபிமான உதவிகளை வழங்கி அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் இலங்கைக்கு வழங்கும் ஆதரவுக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது நன்றியைத் தெரிவித்தார்.
இலங்கை எதிர்நோக்கும் தற்போதைய நிலைமையைத் தாம் அறிந்திருப்பதாகவும், நாடு
விரைவில் மீண்டு வரும் என்று நம்புவதாகவும் திருமதி ஜூலி சன்ங் கோட்டாபயவிடம்
இதன்போது தெரிவித்தார்.