அமெரிக்கா தன்னை கடவுளின் தூதுவராக கருதுகின்றது - புடின் கடும் குற்றச்சாட்டு
மேற்கு நாடுகளை காலனித்துவ ஆணவத்துடன் குற்றம் செயற்படுவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் குற்றம் சுமத்தியுள்ளார். அத்துடன், தனது நாட்டை "முட்டாள்தனமான" தடைகள் மூலம் மேற்குலக நாடுகள் நசுக்க முயற்சிக்கின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய புடின் இவ்வாறு கூறியுள்ளார்.
"நாங்கள் வலிமையானவர்கள், எந்த சவாலையும் சமாளிக்க முடியும். நம் முன்னோர்களைப் போலவே, எந்தப் பிரச்சினையையும் தீர்த்து வைப்போம், நம் நாட்டின் ஆயிரம் ஆண்டுகால வரலாறு இதைப் பற்றி பேசுகிறது, ” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய மொழி பேசும் மக்களைப் பாதுகாக்க வேண்டும்
உக்ரேனில் "சிறப்பு இராணுவ நடவடிக்கையை" தொடர்வதாக புடின் மீண்டும் உறுதிசெய்துள்ளார். மேலும் "முன்னோடியில்லாத வகையில்" மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
படையெடுப்பின் முக்கிய நோக்கம் கிழக்கு உக்ரைனில் ரஷ்ய மொழி பேசும் டான்பாஸ் பகுதியில் உள்ள எங்கள் மக்களைப் பாதுகாப்பதாகும். டான்பாஸுக்கு அப்பால் தெற்கு உக்ரைனின் சில பகுதிகள்.
டான்பாஸில் உள்ள ரஷ்ய வீரர்கள் ரஷ்யாவின் சொந்த வளர்ச்சிக்கான உரிமைகளை பாதுகாக்க போராடுகிறார்கள் என்று புடின் தெரிவித்துள்ளார்.
"தற்போதைய சூழ்நிலையில், எங்களுக்கு ஆபத்துகள் மற்றும் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் பின்னணியில், ஒரு சிறப்பு இராணுவ நடவடிக்கையை நடத்த ரஷ்யா கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இது கடினமானது, நிச்சயமாக, ஆனால் கட்டாயமானது" என்று அவர் கூறினார்.
தன்னை கடவுளின் தூதுவராக கருதும் அமெரிக்கா
அமெரிக்கா தன்னை "பூமியில் கடவுளின் தூதுவர்" என்று கருதுவதாகவும், ரஷ்யாவிற்கு பொருளாதார இறையாண்மை இல்லை என்ற தவறான அடிப்படையில் மேற்கத்திய தடைகள் நிறுவப்பட்டதாகவும் புடின் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனும் அதன் நட்பு நாடுகளும் "வரலாற்றின் போக்கை மாற்ற" முயற்சிக்கின்றனர், இறையாண்மை கொண்ட சுதந்திரமான ரஷ்யாவை பலவீனப்படுத்த முயற்சிக்கின்றனர் என புடின் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் மீதான அதன் ஆக்கிரமிப்பின் காரணமாக மேற்கத்திய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்ட போதிலும் மொஸ்கோ "திறந்த பொருளாதாரமாக" தொடர்ந்து வளரும் விளாடிமிர் புடின் கூறியுள்ளார்.
சில உலகளாவிய நாணயங்கள் "தற்கொலை செய்துகொள்கின்றன" என்று புடின் கூறினார், ரஷ்யாவின் வெளிநாட்டு நாணய இருப்புகளில் சுமார் 300 பில்லியன் டொலர் முன்னெப்போதும் இல்லாத வகையில் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.