வளைகுடா பிராந்தியத்தில் அரசியல் நெருக்கடி! தேவையற்ற மோதல்களில் சிக்கிக்கொள்ள வேண்டாமென ஈரான் எச்சரிக்கை
மத்திய கிழக்கில் நிலவி வரும் தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு இராணுவ நடவடிக்கைகள் தீர்வாகாது என்று ஈரான் அதிகாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய அரபு இராச்சியம் (UAE) மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல்கள் குறித்து இதுவரை எந்த உறுதிப்படுத்தலையும் வழங்காத ஈரான் தூதரக அதிகாரிகள், தேவையற்ற மோதல்களில் அமெரிக்காவும், அமீரகமும் சிக்கிக்கொள்ள வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பதற்றத்தைத் தணிக்கத் தூதரக பேச்சுவார்த்தை
அதேவேளையில், தற்போதைய பதற்றத்தைத் தணிக்கத் தூதரக ரீதியான பேச்சுவார்த்தைகளுக்குத் தாங்கள் தயாராக இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் மோதல்கள் தீவிரமடைந்துள்ள போதிலும், தற்போது வரை போர்நிறுத்த ஒப்பந்தம் ஓரளவு நிலைபெற்றிருப்பது ஒரு நம்பிக்கைக்குரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
இந்தப் பதற்றத்தைக் குறைக்கப் பாகிஸ்தான் தொடர்ந்து மத்தியஸ்த முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், எந்தவொரு தாக்குதலையும் எதிர்கொள்ளத் தாங்கள் தயாராக இருப்பதாகவும், அதே சமயம் அமைதிப் பேச்சுவார்த்தைக்குக் கதவுகள் திறந்தே இருப்பதாகவும் ஈரான் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஈரானின் இந்த நெகிழ்வுத்தன்மை, வளைகுடா பிராந்தியத்தில் போர் மேகங்கள் முழுமையாகக் கலைவதற்கான ஒரு சிறிய வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏளனமாகப் பார்த்தார்கள், குழந்தைகள் தான் வெற்றிக்கு காரணம்.. நடிகர் விஜய் தேர்தல் வெற்றிக்கு பின் முதல் அறிக்கை Cineulagam