பாலியல் வன்முறை தொடர்பான குற்றவியல் சட்டக் கோவையில் திருத்தம்!
குற்றவியல் சட்டக் கோவையின் 363 ஆம் உறுப்புரையின் கீழ் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகள் கடுமையான குற்றச் செயலாக வரையறுக்கப்பட்டுள்ளன.
குறித்த குற்றச் செயலின் கீழ் குறித்துரைக்கப்படும் குற்றங்கள் தொடர்பாக குற்றவியல் சட்டக் கோவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் சட்டரீதியாக பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைக்கு ஏற்புடைய சட்டத்தில் மாறுபாடுகள் காணப்படுவதாகத் தெரியவந்துள்ளது.
மேலும், இலங்கை சட்ட மருத்துவர் சங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுக் கற்கையில் சட்டரீதியாக பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகளுக்கு ஏற்புடைய குற்றவியல் சட்டக் கோவையிலுள்ள ஏற்பாடுகளை திருத்தம் செய்ய வேண்டிய தேவை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது குறித்து நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதிக எண்ணிக்கையிலான வழக்குகள்!
இதற்கிடையில், 2020 முதல் 15 நாட்களில் நாட்டின் பல்வேறு பொலிஸ் பிரிவுகளில் இருந்து சுமார் 142 கற்பழிப்பு சம்பவங்கள், 42 கடுமையான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் மற்றும் 54 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
2010 முதல் 2020 வரை 11,998 கற்பழிப்பு சம்பவங்கள், 4806 கடுமையான பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் 5,891 சிறுவர் துஷ்பிரயோகங்கள் பதிவாகியுள்ளதாக தலைமை அரசாங்க விப் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தாக்கல் செய்த ஆவணத்தில் தெரியவந்துள்ளது.
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
ட்ரம்பின் முற்றுகை ஒரு பக்கம்... 34 எண்ணெய்க் கப்பல்களை சாமர்த்தியமாக வெளியேற்றிய ஈரான் News Lankasri
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri