POC சட்டமூலத்தில் அரசாங்கம் அதிரடி முடிவு – சர்ச்சைக்குரிய பிரிவுகள் நீக்கம்
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் Prevention of Organised Crime (POC) சட்டமூலத்தில் பல முக்கிய திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதில், பொலிசாருக்கு மேலதிக அதிகாரங்களை வழங்கும் சர்ச்சைக்குரிய பிரிவுகள் நீக்கப்படும். பச்சை குத்துதல் (Tattoos), சிகை அலங்காரம் போன்ற வெளிப்புற அடையாளங்களைக் கொண்டு கும்பல் உறுப்பினர்களை அடையாளம் காணும் விதிகள் நீக்கப்படும்.
தனிநபர் அடக்குமுறை
குற்றக் குழுக்களுடன் தொடர்பில் இருப்பவர்களையும் குற்றவாளிகளாகக் கருதும் பிரிவுகள் நீக்கப்படும்.
சட்டமூலம் அரசியல் அல்லது தனிநபர் அடக்குமுறைக்குப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.

நல்லாட்சி மற்றும் சர்வதேச ஒப்பந்தங்களுக்கு அமைவாக புதிய விதிகள் சேர்க்கப்படும்.
சட்டமூலத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் குறித்து சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றத்திற்குத் தெரியப்படுத்தியுள்ளார்.
மேலும், பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து விரிவான மீளாய்வுக்குப் பின்னரே, அடுத்த ஆண்டுக்குள் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.