தமிழர் பகுதிகளில் மாவீரர் பெற்றோருக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு - உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!
2027ஆம் ஆண்டுக்கான மாவீரர் பெற்றோரைக் கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வு நேற்று (14.11.2026) விசுவமடு மாவீரர் பெற்றோர் ஏற்பாட்டுக் குழுவின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, மாவீரர் பெற்றோருக்கு உரிய முறையில் மதிப்பளிக்கப்பட்டதுடன், புளியடி சந்தையிலிருந்து மாவீரர்களின் பொதுப் படங்கள் ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டன.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட மாவீரர் பெற்றோருக்கு நினைவுப் பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டன.




வவுனியாவிலும் அனுஷ்டிப்பு
வவுனியாவில் மாவீரர்களின் பெற்றோர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மாநகரசபை மண்டபத்தில் நேற்று(14.11.2026) இடம்பெற்றுள்ளது.
இதன்போது மாவீரர்களது பெற்றோர்கள் கண்டி வீதியில் இருந்து நிகழ்வு இடம்பெறும் மண்டபம் வரை மங்கள வாத்தியம் முழங்க ஊர்வலமாக அழைத்துச்செல்லப்பட்டு மதிப்பளிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து மாவீரர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வும் இடம்பெற்றது. பிரதான ஈகைசுடரினை நான்கு மாவீரர்களின் தாயாரான செபஸ்தியாம்பிள்ளை புஸ்பவதி அம்மையார் ஏற்றி வைத்து நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து மாவீரர்களின் திருவுருவ படத்திற்கு ஒளிதீபம் ஏற்றி மலர்தூவி, அஞ்சலி செலுத்தப்பட்டது. உணர்வெழுச்சியுடனா இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளருமான செ.கஜேந்திரன், சிரேஸ்ட சட்டத்தரணி காண்டீபன், கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளர் எஸ்.தவபாலன், கட்சியின் உள்ளூராட்சி மன்ள உறுப்பினர்கள் மற்றும் பெருமளவான பொதுமக்கள், கலந்து கொண்டிருந்தனர்.
மேலதிக தகவல் - திலீபன்


