நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்
நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது.
நாடாளுமன்ற குழு கூடியபோது நாடாளுமன்ற பணிக்குழாமினரின் கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற குழுவின் தீர்மானம்
எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, நாடாளுமன்ற பணிக்குழாமினருக்கான உணவு கட்டணங்களை நிர்வாக தர அதிகாரிக்கு மாதம் 4000 ரூபாவாகவும், நிர்வாக தரமற்ற ஊழியருக்கு மாதம் 2,500 ரூபாவாகவும் 2025.06.01 முதல் வசூலிக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது.
அதன்படி, இந்த புதிய விலைகள் எதிர்வரும் ஜூலை மாதம் 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விடுமுறை இல்லம்
மேலும், மே 23ஆம் திகதி குழுவால் தீர்மானிக்கப்பட்டபடி, நாடாளுமன்ற பொது உணவகத்தில் உணவுகளை கொள்வனவு செய்யும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சாரதிகள், பொலிஸ் அதிகாரிகள், ஜனாதிபதி/பிரதமர் பாதுகாப்புப் படை அதிகாரிகள் மற்றும் ஊடகவியாளாலர்களுக்கும் தற்போது வசூலிக்கப்படும்.
உணவுக் கட்டணங்கள் மாறாமல் இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் நுவரெலியாவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் விடுமுறை இல்லத்தின் ஒரு பகுதியை நாடாளுமன்ற ஊழியர்களுக்காக ஒதுக்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 3 நாட்கள் முன்

மகாநதி சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் கோமதி பிரியா.. குவியும் வாழ்த்துக்கள் Cineulagam

சோழனை கடத்தியது யார், நிலாவிடம் மொத்த உண்மையையும் கூறிய பல்லவன்.. அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
