அம்பாறையில் சூட்சுமமான முறையில் கஞ்சா செடி வளர்ப்பு:ஒருவர் கைது (Video)
அம்பாறை - சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அன்னமலை பகுதியில் வீட்டுத் தோட்டத்தில் சூட்சுமமான முறையில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை நேற்று (24.10.2022) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அன்னமலை பகுதியை சேர்ந்த 58 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தேடுதல் நடவடிக்கை
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 53 கஞ்சா செடிகளை வளர்த்து வந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த தேடுதல் நடவடிக்கையில் வளர்க்கப்பட்ட கஞ்சா செடிகளும் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபரையும் மீட்கப்பட்ட சான்று பொருட்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri
