இரும்பு கம்பியால் பொலிஸ் அதிகாரிகளைத் தாக்க முயற்சி! எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை
புதிய இணைப்பு
இரும்புக் கம்பியால் பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கத் தயாரான சந்தேக நபரைக் கட்டுப்படுத்த, பொலிஸார் வானத்தை நோக்கிச் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கி சூட்டில் யாரும் உயிரிழக்கவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அளுத்கம தர்கா நகர் பகுதியில் இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அளுத்கம தர்கா நகர் பகுதியில், இரு குழுக்களிடையே ஏற்பட்ட தகராறு தொடர்பாக 119 என்ற அவசர அழைப்பு மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
இதன்போது, சந்தேக நபர் ஒருவர் இரும்புக் கம்பியால் பொலிஸ் அதிகாரிகளைத் தாக்க முயன்றதாகவும், அதனைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸ் அதிகாரி ஒருவர் தனது ரிவோல்வர் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டதாகவும் அளுத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
அளுத்கம பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தர்கா நகரில் வழக்கு விசாரணை ஒன்றின் போது குழப்பம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட ஒருவர் மீது அளுத்கம பொலிஸார் இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



