சீதுவயில் துப்பாக்கி சூடு! ஓய்வு பெற்ற இராணுவ வீரரொருவர் படுகாயம்
சீதுவ – ராஜபக்சபுர பகுதியில் துப்பாக்கி சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதி
காயமடைந்த நபர் மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீதுவை நகரசபையில் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் நகர சபை உறுப்பினர் ஒருவரின் தந்தையை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 55 வயது நபர் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் ஓய்வு பெற்ற இராணுவ வீரர் என தெரிவிக்கப்படும் நிலையில், துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
நீர்கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் சீதுவை பொலிஸார் சம்பவம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.





ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan

புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
