அரசாங்கத்திற்கு இருக்கும் ஒரே மாற்று வழி சர்வதேச நாணய நிதியம் - ஹர்ச டி சில்வா
நாட்டில் நிலவும் நிதி நெருக்கடிக்கு அரசாங்கத்திடம் இருக்கும் ஒரே மாற்று வழி சர்வதேச நாணய நிதியத்துடன் நிதி உதவிக்காக இணக்கப்பட்டுக்கு வருவது மாத்திமே என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அரசாங்கத்திற்கு இருக்கும் ஒரே மாற்று வழி சர்வதேச நாணய நிதியம். அதற்கான காரணத்தை நான் கூறுகிறேன்.
இலங்கை மத்திய வங்கி திறைசேரி பத்திரங்களை ஏலமிடுவதன் மூலம் கடந்த 10 ஆம் திகதி 40 பில்லியன் ரூபாய் கிடைக்கும் என எதிர்பார்த்தது.
எனினும் 13 பில்லியன் மாத்திரமே கிடைத்தது. அது எதிர்பார்த்த தொகையில் 40 வீதமாகும். வட்டி வீதம் அதிகரிப்பதை அரசாங்கம் விரும்பவில்லை.
இதனால் குறைந்த வட்டி வீதத்தில் 13 பில்லியன் ரூபாய் மாத்திரமே கிடைத்து. ஏனைய தொகையை ஈடு செய்ய பணத்தை அச்சடிக்கும் அதிகாரத்தை அரசாங்கம் மத்திய வங்கிக்கு வழங்கியது.
பணத்தை அச்சடிப்பதன் மூலம் டொலரின் பெறுமதி மேலும் அதிகரிக்கும். ரூபாயின் பெறுமதி குறையும்.
ரூபாயின் பெறுமதியை அதிகரிக்க வேண்டுமாயின் வட்டி வீதத்தில் மீண்டும் திருத்தங்களை செய்ய வேண்டும் எனவும் ஹர்ச டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.



