இராணுவப் புலனாய்வுத்துறைக்குள் பாரிய மாற்றங்கள்! பலருக்கும் இடமாற்றம்
இலங்கை இராணுவப் புலனாய்வுத்துறையின் முக்கிய அதிகாரிகள் பலருக்கும் திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பொறுப்பேற்றவுடன் ராணுவக் கட்டமைப்பில் பாரிய மாற்றங்களை படிப்படியாக ஆரவாரமின்றி மேற்கொண்டு வருகின்றது.
அதன் ஒரு கட்டமாக அண்மைக்காலமாக புலனாய்வுத்துறையிலும் பாரிய இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இடமாற்றம்
கடந்த காலத்தில் இராணுவப் புலனாய்வுத்துறையின் பணிப்பாளராக இருந்த பிரிகேடியர் புத்திக மஹதன்தில, பதவியில் இருந்து அகற்றப்பட்டு, எதுவித பொறுப்புகளும் வழங்கப்படாமல் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து பிரிகேடியர் பிரபோத சிரிவர்த்தன, புலனாய்வுத்துறையில் இருந்து ராணுவ பேண்ட் வாத்திய இசைக்குழுவின் பணிப்பாளர் பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார்.இவர் புலனாய்வு செயற்பாடு தொடர்பில் விசேட பயிற்சிகள் பெற்றுள்ள இராணுவ அதிகாரியாவார்.
புலனாய்வுத்துறையில் இருந்த இன்னொரு பிரிகேடியர் ஷிரான் அமித், தற்போதைக்கு புனர்வாழ்வு செயற்பாட்டுக்குப் பொறுப்பானவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மற்றொரு பிரிகேடியர் பிரியலால், அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகள் பணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இராணுவப் புலனாய்வுத்துறை
பிரிகேடியர் குமார புலனாய்வுப் பிரிவில் இருந்து ஒதுக்கப்பட்டு, இராணுவ தலைமையக செயற்திட்ட பிரிவில் வெறுமனே உட்கார வைக்கப்பட்டுள்ளார்.
பிரிகேடியர் நுவன் அபேசேகர, இசுருபாய செயற்திட்ட அதிகாரியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதனையடுத்து புலனாய்வுத்துறையில் சிரேஷ்ட கேணல் தரத்தில் இருந்து அதிகாரிகளான சேனக முதுகுமாரண கொத்தலாவலை பயிற்சிக் கல்லூரிக்கும், கெளும் மத்துமகே பொறுப்புகள் இன்றியும், கேணல் முஹம்மத் அன்சார் புத்தளைக்கும், கேணல் புளத்வத்த முல்லைத்தீவுக்கும், கேணல் சாகர கொஸ்தா கிளிநொச்சிக்கும், கேணல் ஜயந்த ஷெல்டன் ஹம்பாந்தோட்டைக்கும், கேணல் முஹம்மத் இக்ராம் ராணுவ ஆய்வுப் பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறான நடவடிக்கைகள் காரணமாக இராணுவப் புலனாய்வுத்துறையின் செயற்பாடுகளில் பாரிய தடங்கல்கள் ஏற்பட்டுள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஆரம்பமாகும் ராகு கேது பெயர்ச்சி: இனி 1 1/2 வருடத்திற்கு இந்த ராசிகள் எச்சரிகையுடன் இருங்கள் Manithan
