அரச ஊழியர்களுக்கு கொடுப்பனவு - அமைச்சர் வாக்குறுதி
இந்த வருட இறுதிக்குள் அரச ஊழியர்களுக்கு சில கொடுப்பனவுகளை வழங்கவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கன்னோருவ தேசிய விவசாய தகவல் தொடர்பாடல் நிலையத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்ச்சியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை, இம்முறை உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு ஊதியம் இல்லாமல் விடுமுறையில் இருக்கும் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாத அபாயம் ஏற்பட்டுள்ளது.
பொது நிர்வாக அமைச்சின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதற்கமைய, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால், வேட்புமனு தாக்கல் செய்த நாளிலிருந்து மூன்று மாதங்களுக்கு ஊதியம் இல்லாத விடுப்பு எடுக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், திருத்தம் செய்து அதனை மாற்றுவதற்கு பிரதமருடன் கலந்துரையாடவுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது பின்னர் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

சிறுமிக்கு ஏற்பட்ட துயரம்... முதல் முறையாக கொடூரமான புதிய தண்டனைக்கு ஒப்புக்கொண்ட நாடு News Lankasri

உலகின் பணக்கார குடும்பம் இதுதான்; மொத்தம் 15,000 உறுப்பினர்கள் - செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri
